Breaking News

பிரதமரே சொன்னாலும்… தமுமுக தலைவர் பேட்டி (தினமலர் 27-08-2006)

உலக அளவிலும் சரி, இந்திய அளவிலும் சரி, குண்டுகளின் சத்தமும், அதைத் தொடர்ந்த மரண ஓலங்களும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கின் றன. இத்தகைய பயங்கர வாதத்தை எதிர்கொள்வதில் இந்தியாவுக்கு கூடுதலாக இருக்கும் இன்னொரு சிக்கல் அதை மதத்தோடு பின்னிப் பிணைத்துப் பார்க்கும் மனப்போக்கு அதிகரித்து வருவதுதான் என்பது அரசியல் பார்வையாளர்களின் கருத்தாக இருக்கிறது.

இந்த நிலையில் பிரதமர் மன்மோகன்சிங் கடந்த வாரம் இஸ்லாமியத் தலைவர் களுடன் கலந்து கொண்ட ஒரு கூட்டத்தில் பேசும்போது ”இந்திரா காந்தியை ஒரு சீக்கிய தீவிரவாதி கொலை செய்தார் என்பதற்காக சீக்கியர்கள் அனைவரையும் பயங்கரவாதிகளாக நினைக்கவில்லை. அதுபோல சில இஸ்லாமிய பயங்கரவாதி கள் அதுபோன்ற செயல்களில் ஈடுபடும்போது இஸ்லாமியர்கள் அனைவரையுமோ, விடுதலைப்புலிகள் செய்த கொலைக்காக தமிழர்கள் அனைவரையுமோ பயங்கரவாதிகளாக நாம் பார்ப்பதில்லை” என்ற பொருள்பட பேசியிருக்கிறார்.

மதத்தையும், பயங்கரவாதத்தையும் குழப்பிக் கொள்ளும் போக்கு அதிகரித்து வரும் இன்றைய சூழலில், பிரதமரின் இந்தக் கருத்து முக்கியத்துவம் வாய்ந்த தாகக் கருதப்படுகிறது.

சூழலின் யதார்த்தம் பிரதமர் சொல்வதைப் பிரதிபலிப்பதாக இருக் கிறதா? பயங்கரவாத நடவடிக்கைக்கு எதிரான நடவடிக்கையில் அரசின் அணுகுமுறை மதத்துக்கு அப்பாற்பட்ட தாகத்தான் இருக்கிறதா? இப்படிக் கூறும் பிரதமரின் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு சிறுபான்மையினர் நலனில் அக்கறை காட்டுவதற்கு உள்ளதா? இப்படிப் பலர் தரப்பிலும் எழுப்பப் படும் கேள்விகளுடன் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ்வைச் சந்தித்தோம்.

பிரதமரின் பேச்சிலிருந்தே தன் பேட்டியைத் துவங்கிய அவர், அது தொடர்பான தனது மற்ற கருத்துக் களையும் மளமளவென அடுக்கினார்.

”இந்தியாவின் இன்றைய சூழலில் பிரதமரின் இந்தக் கருத்து முக்கியத்துவம் வாய் ந்தது மட்டுமல்லாமல், வரவேற்புக்கும் உரியது.

”பயங்கரவாதம்’ என்ற சொல் பல ஆண்டுகாலமாக முஸ்லிம்களை நோக்கி மிகத் தவறான புரிதலோடு பிரயோகிக் கப்பட்டு வருகிறது. யாரோ ஒருசிலர் செய்யும் தவறுக்கு ஒட்டுமொத்தமாக சமூகத்தையே குற்றவாளிகளாகப் பார்க்கும் போக்கு ஒரு மதச்சார்பற்ற நாடான இந்தியாவில் இருப்பது வேதனைக்குரியது. இந்த நிலையில் பிரதமர் இவ்வாறு கூறியிருப்பது மிகவும் ஆறுதல் அளிக்கக் கூடியதாக இருக்கிறது. நாட்டின் பிரதமரே இப்படிக் கூறிய பிறகாவது, ‘தீவிரவாதிகள், பயங்கரவாதிகள்’ போன்ற வார்த்தைகளை கவனமாகவும், அப்பாவி மக்களின் மனதை அது புண்படுத்தாத வகையிலும் ஊடகங்கள் பயன்படுத்த வேண்டும் என்பதே எங்களின் எதிர்பார்ப்பு.

பெங்களூரில் உள்ள விஞ்ஞானக் கழகம், டில்லியில், வாரணாசியில் சமீபத்தில் மும்பையில் என நடந்த குண்டு வெடிப்புச் சம்வங்களுக்கு காரணமான உண்மைக் குற்றவாளிகளை இதுவரைக் கண்டுபிடித்ததாகத் தெரியவில்லை. சந்தேகத்தின் அடிப்படையில் சிலரைக் கைது செய்து, விசாரித்து வருவதாக சில ‘திகில்’ செய்திகள் பத்திரிகைகளில் வரவைக்கப்படுவதைத் தவிர, உண்மை யான நடவடிக் கைகள் எதுவும் எடுக்கப்படுவதாகத் தெரியவில்லை. ஐதராபாத் ரயிலில் தீ பிடித்து எரிந்ததற்கு மின் கசிவுதான் காரணம் என்று ரயில்வே அதிகாரிகள் கூறிவிட் டார்கள். ஆனால் சில ஊடகங்கள் இதை ‘பயங்கரவாதி களின் சதி’ என்று செய்தி வெளியிடுகின்றன. இது ‘ஊடக பயங்கரவாதம்’ இல்லையா? பிரதமர் மிகச் சரியா கவே புரிந்து கொண்டு சொல்லி இருக்கிறார். இங்கிலாந்தில் அயர்லாந்து பிரச்சி னைக்காகப் போராடுபவர்கள் ஐரிஷ் பயங்கரவாதிகள் என்றுதான் அழைக்கிறார்கள்.

அமெரிக்காவின் வெள்ளை இன வெறியர்களை ‘ஃகமஃகஆல ஃகஆச’ என்றுதான் அழைக்கிறார்கள். இதைப்போல ஐரோப்பாவில் பல போராட்டக் குழுக்கள் இருக் கிறார்கள். யாரையும் அவர்களுடைய மதத்தோடு அடையாளப்படுத்தி அழைப் பதில்லை. இந்தியாவிலும் அஸ்ஸாமில் உள்ள உல்பா தீவிரவாதிகள், நாகலாந்தில், மேகாலயாவில் எனப் பல போராட்டக் குழுக்கள் இருக்கின்றன. இவர்களை மதம் சார்ந்த அடையாளத் தோடு அழைப்பதில்லை.

பாலஸ்தீனத்தின் ‘ஹமாஸ்’ அமைப்பின் போராட்ட வழிமுறைகளில் எங்களுக்கு உடன்பாடில்லை. அப்பாவி மக்களின் உயிரை பலிகொடுப்பதற்கு குர்ஆன் அனுமதிக்கவில்லை. ஆனாலும் ஆக்ரமிப்பால் உருவான இஸ்ரேலுக்கு எதிரான ‘ஹமாஸ்’ இயக்கத்தின் போராட்டம் தவறாகவே சித்தரிக்கப்படுகிறது. ஜனநாய கத்தை ஏற்றுக் கொண்டு பாலஸ்தீன அரசின் அமைச் சரவையிலும் பங்கேற்ற நிலையிலும் கூட ஹமாஸ் இயக்கத்தை பயங்கரவாத இயக்கம் என்றே ஊடகங் கள் சித்தரிக்கின்றன.

அமெரிக்காவின் நவீன காலனிய ஆக்ரமிப்பை எதிர்த்துப் போராடும், ஈராக்கில் உள்ள போராட்டக் குழுக்களின் நியாயமும் புரிந்து கொள்ளப்படவில்லை. பிரிட் டிஷ் காலனி ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடியவர்கள் ‘விடுதலைப் போராட்ட வீரர்கள்’ என்றால் ஈராக்கில் தங்கள் மண்ணின் விடுதலைக்காகப் போராடுபவர்கள் விடுதலைப் போராளிகள் இல்லையா? அமெரிக்காவுக்கு வேண்டுமானால் அவர் கள் பயங்கரவாதிகளாக இருக்கலாம். இந்தியாவுக்குமா? ஆனால், நமது ஊடகங் களும் அவர்களை தீவிரவாதிகள் என்றே குறிப்பிடுகின்றன. இந்த நிலையில் பிரதமர் கூறியிருக்கக்கூடிய இத்தகைய கருத்து மிகவும் முக்கியமானது. ஊடகங் களின் கவனத்துக்கு உரியது.

கேள்வி: பிரதமரின் கருத்து பற்றி பெருமிதப்படுகிறீர்கள். அவர் தலைமை யிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி சிறுபான்மையினர் நலன் தொடர் பான நடவடிக்கைகள் உங்களுக்கு திருப்தி அளிக்கக்கூடிய வகையில் இருக்கிறதா?

பதில்: தேசிய ஜனநாயகக் கூட்டணி என்று அழைக்கப்பட்ட முந்தைய பாஜ தலைமையிலான ஆட்சியில் சிறுபான்மை யிலான ஆட்சியில் சிறுபான்மையினர் ஒருவித அச்சத்துடனேயே வாழ்ந்து வந்த நிலை இருந்தது. இப்போது அந்த நிலையில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. அத்துடன் தேர்தல் நேரத்தில் தற்போது ஆட்சியில் இருக்கும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி சிறுபான்மை யினர் தொடர்பாக பல வாக்குறுதிகளை அளித்து கேரளா, கர்நாடகாவில் இருப்பதைப் போல சிறுபான்மையினருக்கு தனி இடஒதுக்கீடு அளிக்கப்படும் என்பது அவற்றில் முக்கியமானது.

அரசின் குறைந்தபட்ச செயல்திட்டத்திலும் அது இடம்பெற்றது. இதை நடை முறைப்படுத்துவதற்காக நீதிபதி ரங்கநாதன் மிஸ்ரா தலைமையில், ”மதம் மற்றும் மொழி சிறுபான்மையினருக்கான தேசிய ஆணையம்’ அமைக்கப் பட்டுள்ளது. இஸ்லாமிய சமூகத்தின் சமுக பொருளாதார நிலையை ஆய்வு செய்ய நீதிபதி ராஜேந்திர சச்சார் தலைமை யிலான குழு அமைக்கப்பட்டுள்ளது. 59 ஆண்டு கால சுதந்திர இந்திய வரலாற்றில் இவையெல்லாம் முதல் முறையாக நடைபெற் றுள்ள வரவேற்புக் குரிய அம்சங்கள். ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பதவியேற்று இரண்டு ஆண்டுகள் மூன்று மாதங்கள் கடந்துள்ள நிலையில் இதுபோன்ற வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் அரசு இன்னும் விரைவு காட்ட வேண்டும் என்பதே எங்கள் எதிர்பார்ப்பு.

கேள்வி: பிற்பட்டோருக்கான உயர்கல்வித்துறை ஒதுக்கீட்டில் ‘கிரிமிலேயர்’ அணுகுமுறை மேற்கொள்ளப்படும் என்று கூறப்படுகிறதே?

பதில்: கிரிமிலேயர் என்பதை நாங்கள் எதிர்க்கிறோம். ஜாதி வேறுபாடுகளும் சமூக ஏற்றத் தாழ்வுகளும் மலிந்துள்ள ஒரு சமூகத்தில் ‘பொருளாதார ஏற்றத்தாழ்வு’ என்பது சரியான அளவுகோலாக இருக்க முடியாது. இட ஒதுக்கீடு என்பது சமூக ரீதியாக பிற்படுத்தப்பட்டவர்கள் என்ற அடிப்படையில்தான் அமைய வேண்டும்.

கேள்வி: தமிழகத்தில் திமுக அரசின் 100 நாள் சாதனைப் பற்றி பரபரப்பாகப் பேசப்படுகிறது. சிறுபான்மையினருக்கு ஆதரவான அரசு என்று கருதப்படும் இந்த அரசின் சிறுபான்மையினர் நலம் சார்ந்த செயல்பாடுகள் எப்படி இருக் கின்றன?

பதில்: இதுவரையில் இருந்த எந்த அரசும் 100 நாட்களில் இத்தனை தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்க முடியாது. தேர்தல் கால வாக்குறுதிகள் தேர்தல் காலத்தோடு போய்விடும் என்பதுதான் பொதுவான கருத்து. ஆனால், பதவி ஏற்ற நாள் அன்றே வாக்குறுதிகளை நிறைவேற்றத் துவக்கி விட்டார் இன்றைய முதல்வர். அதுபோல முஸ்லிம்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் தனி இட ஒதுக்கீடு அளிக்கப்படும் என்ற வாக்குறுதியையும் விரைவில் நிறை வேற்றுவார் என்று எதிர்பார்க்கிறோம்.

தினமலர், செய்திமலர் (நெல்லை) 27-08-2006

Check Also

பத்திரிகையாளர் மோசஸ் படுகொலை: மனிதநேய மக்கள் கட்சி கடும் கண்டனம்

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் கண்டன அறிக்கை