Breaking News

அன்பின் வடிவம் புலவர் அப்துல் ரஹ்மான் மறைந்தார்

அன்பின் வடிவம் புலவர் அப்துல் ரஹ்மான் மறைந்தார்.

தஞ்சை வடக்கு மாவட்ட முன்னால் மாவட்டச் செயலாளர், பொருளாளர் என பல்வேறு பொறுப்புகளில் பணி செய்த அன்பிற்கினிய அண்ணன் புலவர் என்று அனைவராலும் அழைக்கப்படும் அப்துல் ரஹ்மான் அவர்கள் இன்று திருச்சியில் மருத்துவமனை ஒன்றில் மரணமடைந்தார் என்ற செய்தி ஆறாத் துயரத்தை அளித்தது.

பள்ளிக்கூட ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்ற பிறகு தொடர்ச்சியாக தமுமுகவில் இணைந்து சமூகப் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டவர் புலவர் அப்துல் ரஹ்மான். தஞ்சை மாவட்டம் திருமங்கலகுடியை சேர்ந்த புலவர் அப்பகுதியில் உள்ள அனைத்து தரப்பு மக்களாலும் நேசிக்கப்பட்ட சுமூதாய ஊழியராகத் திகழ்ந்தார்.

கடந்த பல மாதங்களுக்கு முன்பு அவரை நான் நேரில் சென்று உடல் நலன் விசாரித்தேன். அப்போது அவர் உடல் நலன் குன்றி சிகிச்சை பெற்று வந்தார். அப்போது மிகுந்த அக்கறையுடன் இயக்கம் மற்றும் கட்சியின் பணிகள் குறித்து ஆர்வத்துடன் கலந்துரையாடினார். சதா நேரமும் அமைப்பின் நலன் குறித்தும் சமுதாய பணிகள் குறித்தும் சிந்திப்பதே அவரது அன்றாட செயல்பாடாக அமைந்திருந்தது.

வல்லோன் இறைவன் அவரின் பாவங்களை மன்னித்து அவருக்கு மறுமையின் நற்பேறுகளை வழங்குவதற்கும் அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு அழகிய பொறுமையை அளிப்பதற்கும் பிரார்த்தனை செய்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *