Breaking News

புழல் சிறை டூ யங்கூன் ஏர்போர்ட்… திக் திக் பயண ரிப்போர்ட்! (நன்றி: விகடன்)

கடந்த 6 மாதங்களுக்கும் மேலோக தமிழ்நாட்டில் கைது செய்யப்பட்ட வெளிநாட்டு முஸ்லிம் ஆன்மீக பயணிகளை விடுவித்து அவர்களை தமது தாய்நாட்டிற்கு அனுப்பும் பணியை பல்வேறு சகோதரர்களின் ஒத்துழைப்புடன் ஒருங்கிணைத்து வருகிறேன்.

இந்த பணியில் பல சோதனைகள் வேதனைகள் கடந்து இன்னும் சில நாட்களில் தமிழகத்தில் கைது செய்யப்பட்ட 128 சகோதர சகோதரிகள் அனைவரும் தம் தாய்நாட்டிற்குத் திரும்ப உள்ளார்கள். (129 நபர்களில் ஒருவர் சுகவீனம் காரணமாக மரணித்து விட்டார்) இந்த வரிசையில் மிகவும் திகில் நிறைந்த அனுபவம் கடந்த அக்டோபர் 6 ம் தேதி நடைபெற்றது.

மியான்மார் நாட்டை சேர்ந்த 13 சகோதரர்கள் கடந்த ஆகஸ்ட் 13ம் தேதி திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் குற்றவியல் நடுவரினால் விடுதலை செய்யப்பட்டார்கள். இவர்களுக்குத் தாய்நாடு திரும்ப விமானச் சேவை இல்லாமல் பரிதவித்த நிலையில் அக்டோபர் 7ம் தேதி டெல்லியிலிருந்து மியான்மார் நாட்டின் தலைநகர் யாங்கூன் செல்வதற்கு விமானத்தில் பல முயற்சிகளுக்குப் பிறகு பயணச்சீட்டு கிடைத்தது (விவரம் விகடன் கட்டுரையில் காண்க)

சென்னையிலிருந்து டெல்லி செல்ல இவர்கள் விமான நிலையம் வந்த போது இவர்கள் தடுத்து நிறுத்தப்பட்ட செய்தி தப்லீக் ஜமாஅத்தினர் வழக்கைக் கவனிக்கும் வழக்கறிஞர்களில் ஒருவரான காலிஷா மூலம் அறிய வந்தேன். அவர் தந்த தகவல் உண்மை என்று தெரிந்த பிறகு நாளை டெல்லியிலிருந்து புறப்படும் விமானத்தில் இவர்கள் பயணிக்காத நிலை ஏற்பட்டால் அது தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி விடும் என்று அரசு உயர் அதிகாரிகளிடம் எடுத்துச் சொன்னேன்.

பிறகு என்ன நடந்தது. விகடன் விவரிப்பதை இணைப்பில் பாருங்கள்.

 

Check Also

நீதி பெறுவதென்பது இன்று கடினம்! ஜவாஹிருல்லா ஆதங்கம் ஜுனியர் விகடனில் வெளிவந்த பேட்டி

ஜீனியர் விகடன் இதழில் வெளிவந்துள்ள எனது பேட்டி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *