Breaking News

கலைஞரின் “சன்னும் மூனும்’! தமிழன் எக்ஸ்பிரஸ் கேள்வித் திருவிழா 10

குர்ஆனுக்கும், பகவத் கீதைக்கும் இடையேயுள்ள ஒற்றுமைகளைப் பட்டியலிடுங்களேன்! க. சம்பந்தம், கும்பகோணம்.

இறைவனைப் பற்றிக் குறிப்பிடும் திருக்குர் ஆன்: “என்னை ஒருக்காலும் பார்க்க முடியாது’ (7:143) என்றும், “பார்வைகள் அவனை அடைய முடியாது, ஆனால் அவனோ எல்லோருடைய பார்வைகளையும் அடைகிறான். அவன் நுட்பமானவன்; தெளிவான ஞானமுடையவன்’ (6:103) என்றும் கூறுகின்றது.

இதே போல் பகவத் கீதை : “அவன் மகாத்மா; காணுதற்கரியவன்’ (7:19)

“மதியீனர் மாறுபாடில்லாததும் மேம்பட்ட, வேறொன்றில்லாததும் ஆன என்னுடைய பரமாத்ம ஸ்வரூபத்தை அறிய மாட்டாதவர்களாய், தோன்றுதலில்லாத என்னை, தோற்றத்தை அடைந்தவனாகக் கருதுகின்றனர்’ (7:24)

“அர்ஜுனா! சென்று விட்டனவும், நிகழ்வனவும், இனி வருவனவும் ஆகிய பொருள்களை நான் அறிவேன். ஆனால் என்னை எவனும் அறியான்’ (7:26) என்று கூறுகின்றது.

திருக்குர்ஆன்: “இறைவன் ஒருவனே. அவன் தேவையற்றவன். அவன் (எவரையும்) பெறவுமில்லை; (எவராலும்) பெறப்படவுமில்லை.’ (அத்தியாயம் 112)

பகவத் கீதை :

“அவன் ஆதி தேவன்; பிறவாதவன்’.(10:12)

திருக்குர்ஆன்:

“அவனையன்றி நீங்கள் யாரைப் பிரார்த்திக்கிறீர்களோ அவர்கள் உங்களுக்கு உதவி செய்யவும், தங்களுக்குத் தாங்களே உதவி செய்து கொள்ளவும் சக்தி பெற மாட்டார்கள்.’ (7:197)

பகவத் கீதை :

“எவரொருவர் பரம்பொருளாகத் தாமாக உண்டாக்கி வணங்குகிறாரோ, அவர் பொய்யானவற்றையே வணங்குகிறார்’ (7:20) என்று தெளிவுப்படுத்துகின்றது.

திருக்குர் ஆன் :

“நற்செய்தி கூறுவோராகவும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்வோராகவும் இறைவன் தூதர்களை அனுப்பி வைத்தான்’ (2:213) என்று கூறுகின்றது.

பகவத்கீதை :

“எப்பொழுதெல்லாம் அறம் அழிந்து போய், மறம் மேலோங்குகிறதோ, அப்பொழுதெல்லாம் என்னை நான் பிறப்பித்துக் கொள்கிறேன். நல்லோரைக் காப்பதற்கும், கெட்டவரைக் கரந்தொடுக்குவதற்கும், தர்மத்தை நிலை நாட்டுவதற்கும், யுகந்தோறும் நான் அவதரிக்கிறேன்’ என்று (4:7-9) கூறுகின்றது.

இஸ்லாம் கூறும் இறைத் தூதரின் நோக்கமும், இந்து மதம் கூறும் இறை அவதாரத்தின் நோக்கமும் ஒன்றாக இருப்பதிலிருந்து, இறைத் தூதர்களைதான் இந்துக்கள் இறை அவதாரங்கள் என்கிறார்கள் என்று விளங்கிக் கொள்ள முடிகின்றது.

அநீதிகளும் அக்கிரமங்களும் நடைபெறும்போது, அதனை ஒழிப்பதற்குச் சில நிபந்தனைகளுடன் திருக்குர்ஆன் போரிட உத்தரவிட்டிருப்பதும் உண்மைதான்.

இதேபோல் பகவத் கீதையிலும் 1:43-46, 2:2-3, 2:-31-33, 2:37 (“எதிரிகளை அவர்கள் உறவினர்களாக இருந்தாலும் கொன்று விடு’ என்று ஸ்ரீகிருஷ்ணர் அர்ஜுனனுக்கு அளிக்கும் அறிவுரை) கூறப்பட்டுள்ளது. இதேபோல் பல ஒற்றுமைகளைப் பட்டியலிடலாம்!

சமீபத்தில் தாங்கள் படித்து ரசித்த புத்தகம் எது? மு. உலகநாதன், செஞ்சி.

ஜான் பெர்கின்ஸ் என்ற அமெரிக்கர் எழுதிய ‘இர்ய்ச்ங்ள்ள்ண்ர்ய்ள் ர்ச் ஹய் உஸ்ரீர்ய்ர்ம்ண்ஸ்ரீ ஏண்ற் ஙஹய் என்ற நூல். இந்நூல் கோவை விடியல் பதிப்பகத்தினால், “ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்’ என்ற பெயரில் தமிழிலும் வெளியாகியுள்ளது.

இந்தப் புத்தகத்தைப் படித்து ரசித்தேன் என்று சொல்வதைவிட, ஏழை எளிய நாட்டு மக்களை வஞ்சிக்கும் வகையில் உலகில் நடைமுறைப்படுத்தப்படும் பயங்கரச் சதித் திட்டத்தை அறிந்து வேதனைப்பட்டேன் என்றே கூற வேண்டும்.

பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் வணிக மேலாண்மையில் பட்டம் பெற்ற ஜான் பெர்கின்ûஸ அமெரிக்காவின் மிகப் பெரியதும், மிகுந்த ரகசியத்துடனும் இயங்கும் நேஷனல் பாதுகாப்பு நிறுவனம் (சஹற்ண்ர்ய்ஹப் நங்ஸ்ரீன்ழ்ண்ற்ஹ் அஞ்ங்ய்ஸ்ரீஹ்) தனது பணியில் அமர்த்தியது. முதலில் ஈக்குவடாரில் இயங்கும் அமைதிப் படையிலும், பிறகு பாஸ்டனில் இயங்கும் சார்லெஸ் டி.மெயின்ஸ் நிறுவனத்திலும் பணியாற்றுவதற்காகவும் பெர்கின்ஸ் அனுப்பி வைக்கப்பட்டார்.

அவருக்குக் கொடுக்கப்பட்ட பணி, பொருளாதார அடியாளாகச் செயல்படுவதுதான். பத்தாண்டுகளாகப் பொருளாதார அடியாளாக தான் செயல்பட்டது குறித்து அவர் தரும் ஒப்புதல் வாக்குமூலமம்தான் இந்த நூல்.

அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கைகளுக்கு ஏற்ப எவ்வாறு உலக நாடுகளின் தலைவர்கள் பொருளாதார அடியாட்கள் மூலமாகவும், அவர்கள் தங்கள் பணியில் தோற்றுவிட்டால் “குள்ள நரிகள்’ என்று அழைக்கப்படும் உளவுப் படையினர் பொறுப்பை ஏற்று அவர்கள் மூலமாக எவ்வாறு வழிக்குக் கொண்டு வரப்படுகின்றார்கள் என்பதை விரிவாக விவரிக்கின்றது இந்த நூல்.

அமெரிக்காவின் கொள்கைகளுக்கு உடன்படாத மூன்றாம் உலக நாடுகளின் தலைவர்கள் எப்படி தீர்த்துக் கட்டப்பட்டார்கள் என்பதையும் இந்த நூலை படிக்கும்போது அறிய முடிகின்றது. உதாரணமாக லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஒன்றான ஈக்வடாரில் நீண்ட கால சர்வாதிகார ஆட்சிக்குப் பிறகு, ஜெய்மே ரோல்டோஸ் அந்நாட்டின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஈக்வடாரின் எண்ணெய் வளங்களை எடுத்துச் செல்லும் வெளிநாட்டு நிறுவனங்கள் தங்களுக்குக் கூடுதல் தீர்வை கட்ட வேண்டும் என்று நிர்பந்தித்தார். இவரை வழிக்குக் கொண்டு வர பல ஆசைவார்த்தைகள் கூறப்பட்ட போதினும் எதற்கும் வளைந்து கொடுக்காத அவர் 1991ல் ஒரு விமான விபத்தில் கொல்லப்பட்டது ஒரு படுகொலைதான் என்பதை பெர்கின்ஸ் தத்ரூபமாக விளக்குகிறார்.

ஏழை நாடுகளின் பொருளாதார வளங்களைச் சூறையாடப் பன்னாட்டு நிறுவனங்கள் எவ்வளவு நுணுக்கமாகத் திட்டமிட்டுச் செயல்பட்டு வருகின்றன என்பதையும், இத்தகைய நாட்டின் ஆட்சியாளர்களைத் தங்களின் தலையாட்டி பொம்மைகளாக எப்படி மாற்றுகின்றன என்பதையும்,

அமெரிக்க அரசே எவ்வாறு பன்னாட்டு நிறுவனங்களின் புரவலராகச் செயல்படுகின்றது என்பதையும் ஜான் பெர்கின்ஸ் தனது சொந்த அனுபவத்தின் அடிப்படையில் நயம்பட இந்த நூலில் எடுத்துரைக்கிறார். மூன்றாம் உலக நாடுகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துகிறோம் என்ற பெயரில் உலக வங்கி போன்ற நிறுவனங்களின் நயவஞ்சகச் செயல்பாடுகளையும் இந்த நூலில் தோலுரித்துக் காட்டுகிறார் பெர்கின்ஸ்.

அமெரிக்காவைப் பற்றிய நமது நாட்டு மக்களின் பல மாயைகளைத் தகர்த்தெறிகின்றது இந்த நூல். பன்னாட்டு நிறுவனங்கள் நமது நாட்டிற்கு வந்து செயல்படுவது பெரும் சிறப்பு என்ற பொதுவான எண்ணம் எவ்வளவு தவறானது என்பதையும்,

இந்த நிறுவனங்கள் எவ்வாறு நமது மண்ணையும், நீரையும் விஷமாக்கிக் கொண்டிருக்கின்றன என்பதை அனுபவபூர்வமாக விவரிக்கும் இந்த நூலை ஒவ்வொரு இந்தியனும் படித்து விழிப்புணர்வு பெறுவது அவசியமாகும்.

தி.மு.க. தலைவர் கலைஞருக்கும், உங்களுக்கும் இடையே நடந்த சுவாரஸ்யமான உரையாடல் ஒன்றை இங்கே பதிவு செய்ய முடியுமா? மு. கண்ணபிரான், முசிறி.

2006ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு பல முறை, தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்களை நானும், எம் கழகத்தின் பொதுச் செயலாளருமான எஸ். ஹைதர் அலியும் சந்தித்து தேர்தல் தொடர்பாகப் பேசியுள்ளோம். த.மு.மு.க. தேர்தலில் போட்டியிடாத கட்சி என்பதால், தி.மு.க. கூட்டணியில் உள்ள முஸ்லிம் லீக் கட்சிக்குக் கூடுதல் இடங்கள் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்திப் பேசினோம்.

“முஸ்லிம் லீக் கட்சிக்கு ஐந்து இடங்கள் அளிக்கப்பட வேண்டும்’ என்றும், “தனி சின்னத்தில் அக்கட்சி போட்டியிட அனுமதிக்க வேண்டும்’ என்றும் நாங்கள் வலியுறுத்தினோம். “ஐந்து இடங்கள் கொடுக்க இயலாது’ என்றும், “தி.மு.க. சின்னத்தில்தான் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் போட்டியிட வேண்டும்’ என்ற நிலையில் கலைஞர் பேசி வந்தார்.

நாங்கள் விடாப்பிடியாக எங்கள் கோரிக்கையை வலியுறுத்தி வந்தோம். இறுதியாகக் கலைஞர் தனக்கே உரிய நயத்துடன் “சன்னும் மூனும் தருகிறேன்’ என்று கூறிப் பேச்சு வார்த்தையைச் சுமுகமாக முடித்து வைத்தார்.

அதாவது “சன்’- உதயசூரியன் சின்னத்தில் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் போட்டியிட வேண்டும், “மூனும்’- மூன்று இடங்கள் அவர்களுக்குத் தரப்படும் என்று கலைஞர் கூறினார்.

“சன்னும் மூனும்’ என்ற ஆங்கில வார்த்தைகளை இவ்வளவு நேர்த்தியாக அவர் பயன்படுத்தியது அவரது கலையுணர்வுக்கு மற்றொரு எடுத்துக்காட்டாக அமைந்தது.

கேள்வித் திருவிழா (02.06.2008-தமிழன் எக்ஸ்பிரஸ்)

Check Also

பத்திரிகையாளர் மோசஸ் படுகொலை: மனிதநேய மக்கள் கட்சி கடும் கண்டனம்

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் கண்டன அறிக்கை